குஜராத்... கட்டிலில் கத்திக்குத்து காயங்களோடு சடலமாக கிடந்த கணவன். கணவன் கிடந்த கோலத்தை கண்டு கதறி அழுத மனைவி. இளைஞர் ஒருவரை பிடித்து கஸ்டடியில் எடுத்த போலீஸ். விசாரணையில் வெளிவந்த பல பகீர் தகவல்கள். பெற்ற மகளே தந்தைக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொலை செய்தது அம்பலம். ஆசை ஆசையாக பெற்று வளர்த்த மகளே தந்தைக்கு எமனாக மாறியது ஏன்? பின்னணி என்ன?குஜராத்துல உள்ள வதோதரா பகுதிய சேந்த ஷானாவுக்கு கல்யாணமாகி 17 வயசுல ஒரு மகள் இருக்காங்க. இந்த சிறுமியும் அதே பகுதிய சேந்த ரஞ்சித்-ங்குற நபரும் நண்பர்களா பழக ஆரம்பிச்சு, அதுக்கப்புறம் காதலிச்சுட்டும் இருந்துருக்காங்க. ஆனா அடுத்த கொஞ்சம் நாட்கள்ல இவங்களோட காதல் விவகாரம் சிறுமியோட வீட்டுக்கு தெரிய வந்துருக்கு. மகளோட காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்ச பெற்றோர், ஒழுங்கா அந்த பையன காதலிக்குறத கைவிட்டுட்டு நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறுற வழியப் பாருன்னு அட்வைஸ் பண்ணிருக்காங்க.ஆனா அத காதுல வாங்காத சிறுமி தொடர்ந்து அந்த இளைஞர காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. எங்க, நம்ம காதல சிறுமியோட பெற்றோர் பிரிச்சுருவாங்கன்னு நினைச்ச ரஞ்சித், சிறுமிய ப்ரையின் வாஷ் பண்ணி, அவங்க கூப்டுட்டு ஓடிப்போய்ட்டாரு. மகள் காணாம போனத நினைச்சு கொதிப்படைஞ்ச பெற்றோர், ரஞ்சித் மேல காவல்நிலையத்துல புகார் அளிச்சுட்டாங்க.அடுத்து ரெண்டு பேரையும் வலைவீசி தேடுன போலீஸ், நண்பர் ஒருத்தரு வீட்ல பதுங்கியிருந்த ரஞ்சித்தையும், அந்த சிறுமியவும் கண்டுபிடிச்சுருக்காங்க. அதுக்கப்புறம் சிறுமிய அவங்க பெற்றோர் கூட அனுப்பி வச்ச போலீஸ், ரஞ்சித்த போக்சோ வழக்குல அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. கொஞ்சம் நாட்கள சிறையில கம்பி எண்ணுன ரஞ்சித், பெயில்ல வெளிய வந்துருக்காரு.அதுக்கப்புறம் ரெண்டு பேரோட காதல் இன்னும் ஸ்ட்ராங்க ஆகிருக்கு. ரஞ்சித் சிறையில இருந்து வெளிய வந்தத தெரிஞ்சுக்கிட்ட பெற்றோர், சிறுமிய ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இதனால கோபமான சிறுமி, தந்தை உயிரோட இருக்க வர்ற நம்ம காதலுக்கு தொந்தரவா தான் இருக்கும்னு நினைச்சு, காதலன் கூட சேந்து கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. அதுபடி முதல்ல தந்தையோட சாப்பாட்டுல அந்த சிறுமி தூக்க மாத்திரைய கலந்துருக்காங்க. ஆனா அதுல போதிய அளவு மாத்திரைய போடாததால தந்தைக்கு எதுவும் ஆகல.இதனால சிறுமியோட முதல் திட்டம் தோல்வியடைஞ்சுருச்சு. அதுக்கடுத்து ரெண்டாவது முறையா குடீநீர்ல தூக்க மாத்திரைய கலந்துருக்காங்க. அப்ப தண்ணீர் கசக்குற மாதிரி இருந்ததால அந்த தண்ணியவும் குடிக்கல. இதனால ரெண்டாவது திட்டமும் தோல்வியடைஞ்சுருச்சு.ரெண்டு திட்டம் தோல்வியடைஞ்சும், ஆத்திரம் தீராத சிறுமி மறுபடியும் தாய், தந்தைக்கு சாப்பாட்டுல தூக்க மாத்திரைய கலந்து கொடுத்துருக்காங்க. அப்ப அந்த சாப்பாட்ட சாப்பிட்ட பெற்றோர் கொஞ்ச நேரத்துல மயங்கிட்டாங்க.அதுக்கப்புறம் தன்னோட காதலனுக்கு ஃபோன் பண்ண சிறுமி சாப்பாட்டுல மாத்திரைய கலந்த விஷயத்த சொல்லிருக்காங்க. இதகேட்ட ரஞ்சித் தனது நண்பர் ஒருத்தர கூப்டுட்டு நேரா சிறுமியோட வீட்டுக்கு போய்ருக்காரு.அதுக்கடுத்து நேரா ஷானாவோட அறைக்குள்ள போன ரஞ்சித்தும் அவரோட ப்ரண்டும் மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து ஷானாவ 3 முறை கத்தியால குத்திக் கொன்னுட்டாரு.விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் ரஞ்சித், 17 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க...