ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாமென சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணி வகுப்புக்கு அனுமதி கேட்பதாகவும், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால் 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அற்ப காரணங்களை கூறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது எப்படி? என வினவினார்.