கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கிணற்றில் விழுந்தவரை பல மணி நேர முயற்சிக்குப் பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட கோதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான எல்தோஸ். இவர் அப்பகுதியில் 25 அடி ஆழமும் 10 அடி உயரத்திற்கு தண்ணீரும் காணப்பட்ட கிணற்றில் தவறி விழுந்தார். அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டு எல்தோசை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தக்க நேரத்தில் அப்பகுதியினர் தீயணைப்பு துறையினரை வரவழைத்ததால், எல்தோஸ் உயிருடன் மீட்கப்பட்டார்.