சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முக்கியமான அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'சூது கவ்வும்' திரைப்படம் வெற்றியை தொடர்ந்து 2ஆம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனை எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடித்துள்ளார்.