மராட்டிய அமைப்பினரை கண்டித்து கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. பெலகாவி மாவட்டத்தில் கடந்த மாதம் மராத்தியில் பேச மறுத்த கர்நாடக அரசுப் பேருந்து மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் கர்நாடகம்-மராட்டியம் இடையே மொழி பிரச்சனையாக மாறியது. இதை கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக கன்னட கூட்டமைப்பினர் அறிவித்தனர்.