சென்னை அசோக் நகர்ல உள்ள பெயிண்டர் சந்தோசும் எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்த பிரியாவும் 5 வருஷமா காதலிச்சுட்டு இருந்துருக்காங்க.. ரெண்டுபேருக்குமே வீடு ஒரு தெருவுலதான் இருந்துருக்குது.. ஆரம்பத்துல காதல் ஆஹா.. ஓஹோ..ன்னு எந்த பிரச்சனையும் இல்லாம நல்லா போயிட்டு இருந்துருக்குது..ஆனா பிரியாவோட செல்போன் நம்பர் வெயிட்டிங் வர ஆரம்பிச்சதும்தான் ஏழரையே ஆரம்பிச்சிருக்குது.. வெயிட்டிங் வந்தாலே எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை பாக்குற ஆண்கள்கிட்டதான் பேசுறன்னு சந்தேகப்பட்டு சண்டபோட்ட சந்தோஷ், அடுத்து நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு எல்லாத்துக்கும் பிரச்சனை பண்ணிருக்காரு..5 ஆண்டுகளாக காதலித்த சந்தோஷ்-பிரியா.. செல்போனில் வெயிட்டிங்.. ஆரம்பித்த பிரச்சினை.. பிரியாவிடம் சந்தேக சண்டைபோட்ட சந்தோஷ்எங்க அம்மா, அப்பாக்கிட்டகூட அவசரத்துக்கு பேசவிடமாட்டயா? உன்கிட்ட பேச மட்டும்தான் செல்போன் வச்சிருக்குறேனான்னு சந்தோஷ்கிட்ட பிரியாவும் பதிலுக்கு சண்ட போட்ருக்காங்க.. ஆனாலும் சந்தோஷ் காதுலயே வாங்குறமாதிரி தெரியல.. இனி என்ன பேசினாலும் புரிய வைக்கிறது கஷ்டம்ன்னு வெறுப்பான பிரியா சந்தோஷ்கிட்ட பேசுறதேயே நிறுத்திருக்காங்க..ஆனாலும் விடாத சந்தோஷ், பிரியா போற எடத்துக்கெல்லாம் பின்னாலேயே போய் பேசு பேசுன்னு டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சிருக்காரு..தெனம்தெனம் டார்ச்சர் குடுக்குற உனக்கு கழுத்த நீட்றதவிட கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கலாம்னு சந்தோஷ் நம்பரையே பிளாக் பண்ணிட்டாங்க பிரியா..இப்டியே கொஞ்சநாள் போயிருக்குது.. காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம்னு ஒதுங்கி இருந்த பிரியா, ஒருநாள் சாமியார்மடத்துல உள்ள பெட்ரோல் பங்க் பக்கத்துல நடந்து போயிட்டு இருந்துருக்காங்க..வெறுப்பான பிரியா.. செல்போன் எண் பிளாக்..பிரியாவை பின்தொடர்ந்து டார்ச்சர் கொடுத்த சந்தோஷ்பிரியாவும், சந்தோசும் சண்டை.. விலக்கிய மக்கள்..அப்ப, அங்க பெட்ரோல் போட வந்த சந்தோஷ், என் நம்பரையே பிளாக் பண்ணிட்டயா? மரியாதையா அன்பிளாக் பண்ணு அப்டின்னு பிரச்சனை பண்ணிருக்காரு.. அன்பிளாக் பண்ணமாட்டேன், உன்னால என்ன முடியுமோ அத பண்ணிக்கோன்னு சொல்லிருக்காங்க.. அதனால கடுப்பான சந்தோஷ் பிரியாவ அடிக்கிறதுக்காக கை ஓங்கிருக்காரு..பதிலுக்கு பிரியாவும் அடிக்கிறதுக்கு பாஞ்சிருக்காங்க.. அதபாத்த அங்க இருந்த பொதுமக்கள் ரெண்டுபேரையுமே விலக்கிவிட்டு அங்க இருந்து அனுப்பி வச்சிருக்காங்க..இந்த பிரச்சனை நடந்து பத்து நாளைக்கு அப்றம் வடபழனி மார்க்கெட் பக்கத்துல தன்னோட பிரண்ட்கூட பிரியா நடந்து போயிட்டு இருந்துருக்காங்க..அன்பிளாக் செய்யுமாறு பிரியாவிடம் சந்தோஷ் சண்டைமார்க்கெட் அருகில் தோழியுடன் நடந்து சென்ற பிரியாஅங்கயும் வந்த சந்தோஷ் ஒனக்கு கடைசி சான்ஸ் என்கிட்ட பேசு.. என் நம்பர அன்பிளாக் பண்ணு.. இல்லன்னா நடக்குறதே வேறன்னு மெரட்டிருக்கான். அதுக்கும் பிரியா அசஞ்சி குடுக்கல.. சொல்லிட்டே இருக்குறேன் என் பேச்ச கேக்மாட்டாயான்னு பிரியா கன்னத்துல பளார்னு அறைவிட்ருக்காரு சந்தோஷ்..அதுல கீழ விழுந்த பிரியாவ கூட வந்த பிரண்ட் தூக்கி விட்ருக்காங்க.. அடுத்து பிரியாவும் சந்தோஷ் கன்னத்துல அறைஞ்சிருக்காங்க.. ரெண்டுபேரும் மாத்தி மாத்தி அடிச்சி உருண்டுருக்காங்க.. மார்க்கெட்ல இருந்தவங்களும், ரோட்டுல இருந்தவங்களும் ரெண்டுபேரையும் விலக்கி விட்ருக்காங்க..மார்க்கெட் அருகில் மீண்டும் சண்டைபோட்ட காதலர்கள்பிரியாவும், சந்தோஷையும் விலக்கிட்டு அனுப்பிய மக்கள்ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கிட்ட விவரத்த பிரியாவோட அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிருக்காங்க கூட வந்த ஃபிரண்ட். அதேமாதிரி சந்தோஷ் வீட்டுக்கும் தகவல் போயிருக்குது.. என்ன திமிர் இருந்தா என் பையனையே அடிப்பன்னு கொந்தளிச்ச சந்தோஷோட அம்மா செந்தமிழ் தன்னோட பொண்ணு அனிதாவையும், சந்தோஷையும் அழைச்சிக்கிட்டு பிரியா வீட்டுக்கு போயிருக்காங்க..என் பையன காதலிச்சுட்டு செல்போன்ல 24 மணிநேரமும் வெயிட்டிங் வந்தா யாரா இருந்தாலும் கேள்வி கேக்கதான் செய்வாங்க.. அது என்னமோ பெரிய பிரச்சனை மாதிரி செல்போன் நம்பரவேற பிளாக் பண்ணிருக்குற.. என் மகன புடிக்கலன்னா அமைதியா இருக்கணும்.. அதவிட்டுட்டு அடிப்பயா? கைய ஒடிச்சிருவேன்னு செந்தமிழ், பிரியாவ வாய்க்கு வந்தபடி திட்டிருக்காங்க.. அம்மாவுக்கு சப்போர்ட்டா அனிதாவும், சந்தோசும் பிரியாவ கண்டிபடி திட்டிருக்காங்க..பிரியா வீட்டுக்கு சென்ற சந்தோஷின் தாய் செந்தமிழ்பிரியாவை கண்டபடி திட்டி செருப்பால் அடித்த செந்தமிழ்மூணுபேரும் சேர்ந்து திட்டும்போது பிரியாவும் தன்னால முடிஞ்ச அளவுக்கு பதில் சொல்லி பாத்துருக்காங்க.. உங்க மகன்தான் சந்தேகப்பட்டு என்னைய மனஉளைச்சலுக்கு ஆளாக்குறாங்கன்னும், அப்டி ஒரு உறவே வேண்டாம்னு சொல்லிருக்காங்க.. அதையெல்லாம் சட்ட பண்ணாத செந்தமிழ் என் மகன அடிச்ச உன் கன்னத்துல நானே அடிக்கிறேன்னு பிரியாவ செருப்பால அடிச்சிருக்காங்க..அப்போ, சந்தோசும் அனிதாவும் மொறத்த எடுத்து அவங்க பங்குக்கு அடிச்சிருக்காங்க.. அம்மா, அப்பா வெளிய போய்ட்டதால வீட்டுல பிரியா மட்டுமே இருந்துருக்காங்க.. அதனால அவங்களால தனியாளா மூணு பேரையுமே சமாளிக்க முடியல.. பிரியா மட்டுமே வீட்ல இருக்குறத தெரிஞ்சிக்கிட்டு பிளான் பண்ணிதான் செந்தமிழ் தன்னோட மகனையும், மகளையும் அழைச்சிக்கிட்டு போய் பிரியாவ அடிச்சிருக்காங்க..பிரியாவை முறத்தால் அடித்த சந்தோஷின் தங்கை அனிதாமூன்று பேரையும் சமாளிக்க முடியாமல் திணறிய பிரியாஆசைதீர அடிச்சிட்டு மூணு பேரும் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.. ஆனா அவமானம் தாங்காத பிரியா அம்மாவோட சேலைய ஃபேன்ல போட்டு தூக்குல தொங்கி தன்னோட உயிரையே மாச்சுக்கிட்டாங்க..இந்த சம்பவம் நடந்து பத்து வருஷம் ஆச்சு.. மகிளா கோர்ட்ல நடந்த இந்த வழக்குல செந்தமிழ், சந்தோஷ், அனிதா மூணு பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிச்சு நீதிபதி உத்தரவிட்ருக்காரு..காதல்ல சந்தேகம் இருந்ததால ஒரு பொண்ணோட உயிரே போச்சு.. அதனால காதலனோட சேந்து அவனோட குடும்பமே ஜெயிலுக்கு போயிருச்சு..அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய பிரியா10 ஆண்டுகளுக்குப்பின் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புசந்தோஷ், செந்தமிழ், அனிதாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை2014 ஆம் ஆண்டு காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் காதலி தூக்கு மாட்டி இறந்த வழக்கில் மகிலா கோர்ட்டில் இன்று எதிரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது சம்பந்தமாக மேற்படி வழக்கில் இறந்து போன சத்யா 1வது எதிரியும் ஐந்து வருடங்களாக காதலராக இருந்து வந்ததாகவும் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்த நிலையில் சம்பவ நாளன்று இரு குடும்பத்தாருக்கு இடையே சண்டை வந்த போது மேற்படி 2வது, மற்றும் 3வது எதிரிகள் இறந்து போன நபரை செருப்பு மற்றும் முறத்தால் அடித்ததால் மன உளைச்சலில் சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்ட நிலையில் சட்ட பிரிவு மாற்றம் செய்து மகிலா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த நிலையில் இன்று.18/12/2024 மகிலா நீதிமன்ற கணம் நீதிபதி ஸ்ரீதேவி அவர்கள் மேற்படி 3 எதிரிகளுக்கு இரண்டு வருட சிறை தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராத தொகை. என தீர்ப்பளித்த நிலையில் மேற்படி எதிரிகள் மேல்முறையீடு செய்வதாக கூறி தல பத்தாயிரம் அபராத தொகையை கட்டிவிட்டு பிணையில் சென்றார்கள்.