மேற்கு வங்கத்தில், பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சிறுமியின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தை. சில மணி நேரத்தில் மாயமான அதிர்ச்சி. மதிய நேரத்தில் ரத்தம் கசிந்த நிலையில் மீட்பு. சிறுமிக்கு விடிய விடிய நடந்தது என்ன? என்பதனை அலசி ஆராயும் போதே உடல் நடுங்குகிறது.மேற்கு வங்கம் மாநிலம், ஹூக்ளி தாரகேஷ்வர் ரயில் நிலையம் அருகே, பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. வீட்டினுள் புழுக்கமாக இருந்ததால் இரவு நேரத்தில், பாட்டியும் அவரது 4 வயது பேத்தியும் கொசுவலையை அமைத்துக் கொண்டு, உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விடியற்காலையில் பாட்டிக்கு திடீரென முழிப்பு வந்து பார்த்த போது, கொசு வலை கிழிக்கப்பட்டு அருகில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை காணவில்லை. பதறிப்போன பாட்டி, சிறுமியின் பேரை சொல்லி அழைத்தபடி அக்கம் பக்கம் தேடிய போது எங்கும் தென்படவில்லை என சொல்லப்படுகிறது.பல மணி நேரம் தேடித்தேடி பார்த்து ஓய்ந்து போனவர்கள், மதிய நேரத்தில் தாரகேஷ்வர் ரயில் நிலைய ஓரம் இருந்த கால்வாயில் சிறுமி நிர்வாண கோலத்தில் மயக்க நிலையில் இருப்பதை பார்த்துள்ளனர். உடலில் ஆங்காங்கே காயங்களும், கன்னம் பகுதியில் அழுத்தி கடித்த பல் தடமும் இருந்திருக்கிறது. இதுதவிர பிறப்புறுப்பு பகுதியில் நிற்காமல் ரத்தம் கசிந்தபடி இருந்திருக்கிறது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததுடன், முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.வீட்டிற்கு வந்த பின்னும் சிறுமியின் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு நிற்காததால், போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டார். சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இதனால், நிலை குலைந்து போன குடும்பத்தினர், செய்வதறியாது திணறிப் போயினர். சிறுமி காணாமல் போன போதே போலீசில் புகாரளித்ததாகவும் ஆனால், அவர்கள் மெத்தனமாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.இந்நிலையில், திடீர் திருப்பமாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை எத்தனை மணிக்கு கடத்தி சென்றார்? என்ன செய்தார்? எதற்காக கால்வாயில் வீசினார்? உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | சடலமாக கிடந்த இளைஞர் - 'HAIR DYE' குடித்து உயிரை விட்ட கொடூரம்