கர்நாடக மாநிலம் பன்னேருகட்டா தேசியபூங்காவில், சுற்றுலா பயணிகளின் பேருந்தில் சிறுத்தை ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பன்னேருகட்டா தேசிய வனவிலங்குகள் பூங்காவில் உள்ள விலங்குகளை அருகில் சென்று பார்வையிடும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தில், சிறுத்தை ஒன்று ஏற முயன்றது. இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் பீதியில் கூச்சலிட்டனர்.