தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் செயல்படும் சுமார் 440 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சுமார் இரண்டு லட்சம் வரை காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த மே மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.