பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான செவ்வாய்கிரக விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ((Sotheby)) ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் நைஜர் நாட்டின் அகடெஸ் (( Agadez )) பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. NWA 16788 என அழைக்கப்படும் இந்த விண்கல் சுமார் 25 கிலோ எடையுள்ளது. நாளை ஏலத்திற்கு வரும் இந்த விண்கல் இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்பனையாகலாம் என சொல்லப்படுகிறது.