ரஷ்யாவின் காம்சட்காவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டுக்கு பிறகு பசிஃபிக் பெருங்கடலை தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011 மார்ச்சில் வடகிழக்கு ஜப்பானில் 9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி மற்றும் அணு உலை விபத்தை ஏற்படுத்தியது.