அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது தம் வேலை இல்லை என்றும், செயல்மொழிதான் தமது அரசியலுக்கான தாய் மொழி எனவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக முதல் மாநில மாநாடு தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில், அரசியலை வெற்றி தோல்வியை கொண்டு மட்டும் அளவிடாமல், ஆழமான அக உணர்வாக, கொள்கை கொண்டாட்டமாக அணுக போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம் என அறிவுறுத்திய விஜய், பள்ளி சிறார்கள், கர்ப்பிணிகள், உடல் நலம் குன்றியவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டகவே இருக்கவேண்டும் என அறிவுறுத்திய விஜய், வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.