கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு மீள்வாழ்வு பணிகளுக்காக கேரள அரசு 750 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கேரள அரசின் வரும் நிதியாண்டுக்காக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது, பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநில நிதி அமைச்சர் பாலகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் 254 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். காணாமல் போன 118 பேரும் உயிரிழந்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு பாதித்த இடங்களில் புதிய நகரியங்களை அமைக்கும் பணியில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா இருவருக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாயும், வீட்டு வாடகையாக மாதந்தோறும் ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.