சென்னை டிடி தொலைக்காட்சி பொன்விழா நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடியது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன நடவடிக்கை எடுக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், டி.டி தொலைக்காட்சி பொன்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடியது குறித்து ஏற்கனவே மன்னிப்பு கேட்கப்பட்டதால் அதை பெரிதாக்க விரும்பவில்லை என கூறினார்.