மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணுவை பள்ளிக்கு அழைத்தது யார்? நிகழ்ச்சியை யார் ஏற்பாடு செய்தது? ஆகிய கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் விசாரணை தாமதமானதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று விசாரணை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த கண்ணப்பன், இரு நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.