காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க, எடப்பாடி பழனிசாமி குடும்பத்திற்கு அனுமதி அளித்து அதிமுக ஆட்சியில் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் EPS உள்பட அவரது குடும்பத்தினர் 18 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், அதிகார துஷ்பிரயோகம் செய்து கூடுதல் குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்த அரசாணையை எதிர்த்த வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி, அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.