அடுத்தமாதம் முதல் அமெரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஐபோன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அனைத்து ஆப்பிள் போன்களின் தயாரிப்பும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றப்படுவதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி Tim Cook தெரிவித்தார்.ஐ பாட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் போன்றவை வியட்நாமில் தயாரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதே நேரம் அமெரிக்கா அல்லாத இதர நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆப்பிள் பொருட்களின் உற்பத்தி தொடர்ந்து சீனாவிலேயே நடக்கும் என அவர் தெரிவித்தார். டிரம்பின் பரஸ்பர விதிப்பு கொள்கை காரணமாக அவர் சீனாவுக்கு அதிகபட்ச வரி விதிக்கலாம் என்பதால் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுகிறது.