சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. 2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல் நேற்று நடந்தது வரை, அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தோற்றுள்ளது.