ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. சீனாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவுடன் மோதிய இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. செவ்வாயன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.