சகோதரியின் வீட்டிற்கு சென்ற பெண், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி, சகோதரி தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுத பெண். வழக்கை திருப்பி போட்ட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். பெற்ற தாயை, மகளே காதலனோடு சேர்ந்து கழுத்தை கொன்று தூக்கில் தொங்கவிட்டது அம்பலம்... தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளிகள் சிக்கினார்களா? பின்னணி என்ன?நைட்டு நேரம். நேத்ராவதிகிட்ட நலன் விசாரிக்குறதுக்காக, ஃபோன் பண்ணிருக்காங்க அவங்க அக்கா. அப்ப அந்த ஃபோனை, நேத்ராவதி எடுக்கல. நேத்ராவதி ஏதாவது வேலையா இருப்பான்னு நினைச்ச அவங்க அக்கா மறுபடியும் காலையில ஃபோன் பண்ணிருக்காங்க. ஆனா அப்பவும் நேத்ராவதி ஃபோன எடுக்கல. அதுக்கப்புறம் நேத்ராவதியோட மகளுக்கு ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. அப்ப அந்த சிறுமியும் ஃபோன எடுக்கல. இதனால பதற்றமடைஞ்ச சகோதரி, நேரா கிளம்பி நேத்ராவதியோட வீட்டுக்கு போய்ருக்காங்க.அங்க கதவு வெளிப்பக்கமா பூட்டிக் கிடந்துருக்கு. நம்ம கிட்ட சொல்லாம, நேத்ராவதி எங்கயும் போக மாட்டான்னு நினைச்ச சகோதரி, எதார்த்தமா ஜன்னல் வழியா எட்டிப் பாத்துருக்காங்க. அப்ப நேத்ராவதி வீட்டுக்குள்ள தூக்குல, சடலமா தொங்கிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பெண், கத்திக் கதறி அழுதுருக்காங்க. சத்தத்த கேட்டு, அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாரும் நேத்ராவதியோட வீட்டு முன்னாடி குவிஞ்சுட்டாங்க. இந்த விஷயத்த கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், கதவ உடைச்சுட்டு உள்ள போய்ருக்காங்க. அடுத்து, சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு, போலீசார் விசாரணையில இறங்குனாங்க.முதல்ல, அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்ட இருந்தும், நேத்ராவதியோட சகோதரிகிட்ட இருந்தும் விசாரணைய ஸ்டார்ட் பண்ணிருக்காங்க போலீஸ். அப்ப, நேத்ராவதிக்கு 16 வயசுல மகள் ஒருத்தங்க இருக்காங்க, அவங்கள இப்ப காணோம்ன்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க சொல்லிருக்காங்க. இதனால சந்தேக மரண வழக்கா பதிவு பண்ண போலீஸ், நேத்ராவதி மகள் எங்க இருக்காங்கன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.இதுக் கிடையில, மறுநாள் வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் நேத்ராவதியோட கழுத்துல காயங்கள் இருந்ததா குறிப்பிட்டிருந்துச்சு. இதனால கொலை வழக்கா பதிவு பண்ண போலீஸ், நேத்ராவதி மக போன் நம்பர ட்ரேஸ் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுல சிக்னல் பக்கத்து கிராமத்துல காட்டிருக்கு. உடனே சிக்னல் காட்டுன ஸ்பாட்டுக்கு போன போலீஸ், அங்கொரு வீட்ல பதுங்கியிருந்த 16 வயசு மகளையும், அவரோட நண்பர்கள் 5 பேரையும் பிடிச்சு போலீஸ் ஸ்டேஷன் கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. அதுல தான் நேத்ராவதி கொலை செய்யப்பட்டதற்கான முழு காரணமும் போலீஸ்க்கு தெரிய வந்துருக்கு.பெங்களூரு, உத்தரஹள்ளி பகுதிய சேந்த நேத்ராவதிக்கு 16 வயசுல ஒரு மகள் இருக்காங்க. இந்த சிறுமி அதே பகுதியில உள்ள ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்குறதா கூறப்படுது. ஒரே மகள்-ங்குறதால நேத்ராவதி மகள் மேல உயிரையே வச்சுருக்காங்க. நேத்ராவதியோட மகளுக்கு ப்ரண்ட்ஸ் சர்கில் அதிகம். அதனால அடிக்கடி தன்னோட வீட்டுக்கு நிறைய ஆண் நண்பர்களையும், பெண் நண்பர்களையும் கூப்டு போய்ருக்காங்க அந்த சிறுமி.இதுக்கிடையில 16 வயசு சிறுமியும், அவங்க கூட படிச்ச 17 வயது சிறுவனும் காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. ரெண்டு பேரும் ஜாலியா பீச், பார்க், ஹோட்டல்ன்னு ஊர் சுத்திட்டு என்ஜாய் பண்ணிட்டு இருந்துருக்காங்க... கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ரெண்டு பேரும் அங்குள்ள பீச்க்கு போய்ட்டு கடற்கரையில உட்காந்து பேசிட்டு இருந்துருக்காங்க.இத பாத்த நேத்ராவதியோட சொந்தகாரங்க, இந்த விஷயத்த சிறுமியோட தாய் கிட்ட சொல்லிருக்காங்க. அதகேட்டு கடும் ஆத்திரமடைஞ்ச நேத்ராவதி, என் வயித்துல பொறந்துட்டு இப்படி ஒரு காரியத்த பண்ண, உனக்கு எப்படி மனசு வந்துச்சு, உன்ன முழுசா நம்பி தான் ஆண் நண்பர்களோட பழக விட்டேன், ஆனா, படிக்குற வயசுல நீ இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல, ஒழுங்கா அந்த பையன் கூட பழகுறத நிறுத்திரு, இல்லன்னா உன்னைய கொன்னுட்டு நானும் சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டிருக்காங்க.ஆனா, தாயோட மிரட்டல காது கொடுத்துக்கூட கேட்காத சிறுமி, அந்த சிறுவன தொடர்ந்து காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. சம்பவத்தன்னைக்கு நைட்டு சிறுமியோட வீட்டுக்கு அவரோட காதலனும், 3 ப்ரண்ட்சும் போய்ருக்காங்க. அப்ப சிறுமியோட காதலன் மட்டும் வீட்டுக்குள்ள போய்ருக்கான். மற்ற சிறுவர்கள் வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்ததா கூறப்படுது. அப்ப திடிர்ன்னு மகளோட அறையில இருந்து ஒரே பேச்சு சத்தம் கேட்ருக்கு. சத்தத்த கேட்டு கண் முழிச்ச நேத்ராவதி, நேரா மகளோட ரூம்க்கு போய் பாத்துருக்காங்க. அங்க மகளும், அவ காதலனும் ஒன்னா இருந்தத பாத்து அதிர்ச்சியடைஞ்ச நேத்ராவதி, ரெண்டு பேரையும் கெட்ட வார்த்தையால திட்டிருக்காங்க.தாய் திட்டுறத பாத்து கோபமான அந்த சிறுமியும், சிறுவனும், வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்த தன்னோட மற்ற ப்ரண்ட்ஸையும் கூப்பிட்டு நேத்ராவதிய சரமாரியா தாக்கி, கழுத்த நெரிச்சுருக்காங்க. இதுல வலி தாங்க முடியாம நேத்ராவதி உயிரிழந்துட்டாங்க.நேத்ராவதி உயிரிழந்தத தெரிஞ்சுக்கிட்டு பதற்றமான அந்த கொலையாளிகள், இத தற்கொலை மாதிரி சித்தரிக்க, நேத்ராவதியோட கழுத்துல துணிய கட்டி, தூக்குல தொங்க விட்டுட்டு, தப்பிச்சு போய்ட்டாங்க.ஆனா, போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் மூலமா இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ், செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி மொத்த கொலையாளிகளையும் பிடிச்சுருக்காங்க. கொலையாளிகள் அத்தனை பேரும் 18 வயசு கீழங்குறதால எல்லாரையும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில அடைச்சு, போலீசார் நடவடிக்கை எடுத்துருக்காங்க... இதையும் பாருங்கள் - வன்னியர் சங்க பிரமுகர் மார்பில் அரிவாள் வெட்டு. மண்டையில் STAR. | VanniyarSangam | Killed