பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக சியோலில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் போராட்டம் நடைபெற்றது. அவசர நிலை ராணுவ சட்டத்தை பிரகடனப்படுத்திய விவகாரத்தில் பதவி நீக்கப்பட்ட, யூன் சுக் இயோலின் அதிகாரப்பூர்வ வீட்டருகே சாலைகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்த காரணத்தால் ரெயின் கோட் மற்றும் குடையுடன் வந்து மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதனிடையே முன்னாள் அதிபருக்கு ஆதரவாகவும் சிலர் சாலைகளில் திரண்டதால் பரபரப்பு நிலவுகிறது.