காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் திருப்பி அனுப்பாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். மேலும் ஹமாஸ் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை இஸ்ரேல் இராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும் என்று வீடியோ மூலம் தெரிவித்தார். நெதன்யாகுவின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல் அவிவ் நகரில் இஸ்ரேலியர்கள் போராட்டம் நடத்தினர்.