ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படும் புனித தீப விழா, ஜெருசலேம் தேவாலயத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் பிற்பகல் 2 மணியளவில் சூரிய ஒளி தேவாலயத்தின் கூரையில் உள்ள ஜன்னல் வழியாக பிரகாசித்து, இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் வைக்கப்பட்டுள்ள விளக்கை ஏற்றுவதாக நம்பப்படுகிறது. அதிலிருந்து மத போதகர் நெருப்பை ஏற்றிய பின்னர் பிராத்தனை செய்து அனைவரது மெழுகுவர்த்தியிலும் தீபம் ஏற்றப்படும். இந்த தீப விழாவையொட்டி புனித கல்லறை மற்றும் தேவாலயம் முழுவதும் பிரகாசமாக காட்சியளித்தது.