தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.