தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் திடலில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் அக்கட்சியின் பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பம் சுமார் 2000 கிலோ எடையும், 101 அடி உயரமும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட தெரியும் வகையில் இந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.