பீகாரில் அரசுப்பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக கூறி போராடிய மாணவரை, அரசு அதிகாரி கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷனை கண்டித்து போராட்டம் நடத்திய தேர்வர்கள், பாட்னாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த அரசு அதிகாரி சந்திரசேகர் சிங், திடீரென மாணவரை கன்னத்தில் அறைந்தார்.