திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் தாயார் மலர்மாலைகள், வெண்பட்டு திருக்குடைகள் ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான மோகினி அலங்கார புறப்பாடு இன்று காலையும், கருட வாகன புறப்பாடு இன்று இரவும் நடைபெறுகிறது. மோகினி அலங்கார புறப்பாட்டில் உற்சவருக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியாருக்கு சூடிக் களையப்பட்ட மலர்மாலைகள், பச்சைக்கிளி ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. கருட வாகன புறப்பாட்டிற்கான வெண்பட்டு திருக்குடைகள், சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் சமர்பிக்கப்பட்டன.