சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் செயல்பட்டு வந்த மீன் விற்பனை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அங்கு மீன் அங்காடி புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மீன்அங்காடியில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், கடைகளின் அளவு சிறியதாக உள்ளதாகவும் கூறி, அதனை மீன்வியாபாரிகள் பயன்படுத்தாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.