'ஆண்டர்சன்- டெண்டுல்கர்' கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்களிலும், இங்கிலாந்து அணி 465 ரன்களிலும் ஆல் அவுட் ஆகின. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்து, 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது.இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.