இங்கிலாந்திற்கு எதிராக லீட்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரும் இடம்பெற வேண்டும் என்றும், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்தார். எந்த ஆடுகளத்திலும் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்களை கைப்பற்ற முடியும் என்றும் கூறினார். மேலும், நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக ஷர்துல் தாகூரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், கொஞ்சம் பேட்டிங் தெரிந்த பவுலர் இந்தியாவுக்கு தேவை, அதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாகூர் முன்னிலை பெறுவதாகவும் ஹர்பஜன் சிங் கூறினார்.