அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.