சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான சலம்பல பாடல், ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய வரிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.