துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 49புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 48புள்ளி 1 ஓவர்களில் 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா உடனான கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பழி தீர்த்தது.