நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 29ஆவது படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்து தோற்றமுள்ள பேப்பரில் கப்பல் ஒன்று கடலில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ், இயக்கவுள்ள இந்த திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.