தங்கள் வீட்டு செல்லப் பிள்ளைக்கு, முதல் மாதவிலக்கு ஏற்பட்ட போது, குடும்பமே சேர்ந்து கொண்டாடிய நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. மாதவிலக்கு ஏற்பட்டால், தீட்டு என்று தள்ளி வைத்த காலம் மாறி, தற்போது சமூகத்தில் முதல் மாதவிலக்கு, கொண்டாடும் தருணம் என மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், சிறுமிக்கு முதல் மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களும், ஆண்களும் அந்த சிறுமியை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். வீட்டிற்குள் நுழையும் போது, சிறுமியின் பாதத்தில் பணத்தை குவித்த ஆண்கள், அவரது காலை தொட்டு வணங்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு வாழ்த்து குவிந்து வருகிறது. பாராட்டுவோம்...