அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக வாஷிங்டன் மற்றும் ஓரிகான் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு இருந்த மூன்று வாக்கு பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மர்ம நபர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 8ஆம் தேதி Vancouver பகுதியில் வைக்கப்பட்ட வாக்குபெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தை ஒத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.