மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல டெல்லி அணியும், 2-வது முறையாக கோப்பையை வெல்ல மும்பை இந்தியன்ஸ் அணியும் முனைப்பு காட்டும்.