பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.