விடுதலை - 2 படம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான விடுதலை-2 திரைப்படம், கடந்த 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.