திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில், நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய வேத பட்டருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நெல் யாசகம் பெற செல்லும் திருவிளையாட்டு நிகழ்வினை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.