கரூர் துயர சம்பவம் தொடர்பாக கைதாகி விடுவிக்கப்பட்ட தவெக நிர்வாகிகள், அக்கட்சித் தலைவர் விஜய்-ஐ சந்தித்து பேசி உள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த துயர சம்பவத்துக்கு பின் முதல் முறையாக தவெக தலைமை அலுவலகத்துக்கு சென்ற விஜய், நிர்வாகிகளுடன் கரூர் விசிட் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் சென்று விஜயை சந்தித்து பேசினர். முன்னதாக, கட்சி அலுவலகத்துக்கு வந்த இருவரது குடும்பத்தாரும் புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ஆசி பெற்றது தொண்டர்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.