கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அதிமுகவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே; என்பதுபோல அவசரப்படும் இபிஎஸ், குற்றவாளி அதிமுகதான் என்ற உண்மை வெளியானவுடன் அமைதியாகி விடுவதாக தெரிவித்துள்ளார்.