கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அதிபர் ரஷித் அல்-அலிமி உறுதி செய்ததாக வெளியான தகவலுக்கு ஏமன் குடியரசின் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த முழு வழக்கு விசாரணையை ஹவுதி கிளர்ச்சியாளர்களே கையாண்டு வருவதாகவும் இதனால் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் அதிபரும் உறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.