கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் வகுப்பறையில் தேர்வெழுதிக்கொண்டிருந்த மாணவரின் ஹால்டிக்கெட்டை கழுகு பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதுவதற்காக மாணவர் ஒருவர் வகுப்பறைக்குள் சென்றார். அந்த மாணவர் தேர்வெழுதிக்கொண்டிருந்தபோது, திடீரென ஜன்னல் வழியாக வந்த கழுகு ஹால்டிக்கெட்டை கொத்திக் கொண்டு, மேல்தள ஜன்னல் ஓரத்தில் சென்று நின்றது. பின்னர் சக மாணவர்கள் கூச்சல் போடவே, கழுகு ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு பறந்துச் சென்றது.