பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோனை, எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் இருந்து அவ்வப்போது பறந்து வரும் மர்ம டிரோன்களை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் ஒரு துப்பாக்கி, 500 கிராம் அளவிலான ஹெராயின் போதைப் பொருள், ஒரு பத்திரிக்கையுடன் பறந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.