துபாயில் 5 மாதங்களுக்கு மேலாக கோமாவில் உள்ள இதயத்துல்லா என்பவர், சென்னை அழைத்துவரப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த 56 வயதான இதயத்துல்லா துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், அடுக்கு கட்டிலில் ஏறும்போது தவறி விழுந்து காயமடைந்ததில், கோமாவுக்கு சென்றார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முயற்சியில், இதயத்துல்லா சென்னை அழைத்து வரப்பட்டார்.