அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படம், பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். முன்னதாக அவருக்கு டிராகன் படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. அதனை பார்த்துவிட்டு படம் குறித்த விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.