நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சிறந்ததாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி. கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர், ஆண்களுக்கு பெண்களின் பிரச்சனைகள் தெரியும் என கூறுவது மிகப்பெரிய பொய் என்று கூறினார்.