இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சாகோஸ் தீவுகளை, மொரீஷியஸ் நாட்டுக்கு விட்டுத்தர இங்கிலாந்து முன்வந்துள்ளது. பிரிட்டிஷ்-இந்திய பெருங்கடல் பிராந்தியம் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்த நிலையில், புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் படி, டியாகோ கார்சியா பகுதி, அடுத்த 99 ஆண்டுகளுக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவத்தின் கூட்டு தளமாக தொடர்ந்து இருக்கும் எனவும், அதை ஒட்டியுள்ள சாகோஸ் தீவுகளை, மொரிஷியஸ் நாட்டுக்கு விட்டுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சாத்தியமாக இந்தியா முக்கிய பங்களிப்பை அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.