ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ளூர் சம்பிரதாயங்களை மீறி திருமணம் செய்த காதல் ஜோடியை, ஏர்க் காலில் பூட்டி நிலத்தை உழ வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதோடு, அவர்களை மாடுகளை போல் குச்சியால் அடித்தும் துன்புறுத்தினர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்பி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.